×

கன்னிகாபுரம் கிராமத்தில் விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை

உத்திரமேரூர், மே 3: கன்னிகாபுரம் கிராம பஸ் நிறுத்த நிழற்குடை முறையாக பராமரிக்காமல் விட்டதால், விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. இதனால், பொதுமக்கள் அங்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.உத்திரமேரூர் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் 250க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் வசதிக்காக, அதே பகுதியில் பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதனை போக்குவரத்து  துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி துறையினர் உள்பட எந்த துறை நிர்வாகமும் முறையாக பராமரிக்கவில்லை. இதனல், நிழற்குடை பழுதடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும், நிழற்குடையின் மீது செடி, கொடிகள் வளர்ந்து புதுர்மண்டி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். இதையொட்டி, இங்கு விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக  உள்ளதால், இங்குள்ள விஷபூச்சுகள், அடிக்கடி கிராம பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கிராம மக்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்ககே அச்சமடைந்துள்ளனர். எனவே பழுதடைந்துள்ள பஸ் பயணிகள் நிழற்குடையை  சீரமைத்து, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : passengers ,village ,residents ,Kannikapuram ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!