×

பொன்னமராவதி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 10 வாகனங்கள் பறிமுதல் 3 லோடு மணல் குவியல் கண்டுபிடிப்பு

பொன்னமராவதி, மே1: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே அன்னவாசல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மணல் ஏற்றிச்சென்ற லாரிகளை மறித்து விசாரணை செய்தனர். அப்போது அனுமதியின்றி ஏற்றி வந்த மணல் லாரிகள் என்பது தெரியவந்து. இதனையடுத்து 7 மணல் லாரிகள், 2 டிராக்டர், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காரையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் லாரி ஓட்டிவந்த 4 டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து மற்ற வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் காரையூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு குவித்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆலம்பட்டியில் மூன்று  லோடு மணல் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மணலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு அள்ளிச் சென்றனர்.

Tags : Ponnamaravathi 3 ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ