×

டாஸ்மாக் பாரில் ரகளை கல்லூரி மாணவன் கைது

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை அய்யாமுதலி தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் (18). கல்லூரி மாணவன். இவர், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கூடுதலாக பில் போட்டது தொடர்பாக பார் ஊழியர் லிங்கேஷ்வரன் (38) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, கடுமையாக தாக்கி உள்ளார்.

மேலும், தனது நண்பர்களுடன் அங்கிருந்த பீர் பாட்டில்களை எடுத்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து வந்த எழும்பூர் போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் இப்ராஹிமை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர் மீது 294 (பி), 323, 427, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : college student ,Tashmak Bar ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது