×

தா.பழூர் அருகே சாலையோரம் 5 ஆண்டுகளாக இயங்காத கைப்பம்பு அகற்ற கோரிக்கை

தா.பழூர், ஏப் 30:  தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கல்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள இயங்காத கைபம்பினை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூரிலிருந்து சுத்தமல்லி வழியாக அரியலூர் செல்லும் சாலையில் கீழமைக்கல்பட்டி கிராமத்தில் சாலையோரம் இயங்காத நிலையில் கைப்பம்பு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அந்த பகுதியில் மக்கள் பயன் பாட்டிற்கும் விவசாய நிலங்களுக்கு செல்லும் கூலி தொழிலாளிகளும் கைப்பம்பு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில்,தற்போது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கைப்பம்பில் தண்ணீர் வராததால் மக்கள் பயன்பாடு இன்றி உள்ளது.

இந்த கைப்பம்பு அமைந்துள்ள அரியலூர் சாலை தற்போது  விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் கைப்பம்பு சாலை ஓரம் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இந்த சாலை வழியாக அரியலூரில் இருந்து கும்பகோணத்திற்கும் , கும்பகோணத்திலிருந்து அரியலூர் நோக்கியும் இரவு நேரங்களில் பயணிக்கும் சிமென்ட்,நிலக்கரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இரவு நேரங்களில் போதிய மின் வெளிச்சமின்றி பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையோரம் உள்ளதால் இந்த கை பம்பை அகற்றி பெரும் உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த செயல்படாத கைப்பம்பை அகற்றி விட்டு சின்டெக்ஸ்   டேங்க் ஒன்றை அமைத்து இந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,workshop ,Thalur ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்