×

இலுப்பூர் அருகே கதவம்பட்டி அய்யனார்கோயில் கும்பாபிஷேகம்

இலுப்பூர், ஏப்.30: இலுப்பூர் அருகே கதவம்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் அருகே உள்ள கதவம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற  அய்யனார் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில்இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர்முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம்  யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் இரண்டு கால பூஜைகளாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பூர்ணாஹுதி நடத்தப்பட்டு  புனித நீர் மங்கள இசையுடன் கோயிலை வலம் வந்து நேற்று காலை 10 மணிக்கு கும்பத்தில் புனிதநீர் ஊற்றி அய்யானார், பூர்ணஷ்ப கலைஅம்மன், பெரியகருப்பர், பிடாரியம்மன் மற்றும் மடையக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகங்கள்  மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மஹா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கதவம்பட்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான  பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.  ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Koothambatte Ayyanar Kovil ,Ilupur ,
× RELATED இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல்