×

செந்துறை அருகே மாட்டுவண்டிகள் மீது லாரி மோதல்: 2 மாடுகள் பலி

ஓட்டுனரை கைது செய்ய கோரி மக்கள் மறியல்
செந்துறை,ஏப்.28: செந்துறை அருகே அரியலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  மாட்டுவண்டிகள் மீது லாரி மோதியது. இதில்  2 மாடுகள் பலியானது. ஒரு மாடு மற்றும் உரிமையாளர் படுகாயமடைந்தனர். லாரி டிரைவரை கைது செய்ய கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி அருகே அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 10 மணியளவில் குழுமூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி45) பிச்சபிள்ளை ஆகியோர் மாட்டுவண்டியில் மணல் கொண்டு வந்து கட்டையன்குடிக்காட்டில் மணல் இறக்கி விட்டு செந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு மாட்டுவண்டிகள் மீதும் பின்னால் வந்த  லாரி மோதியது.  இதில் மாட்டுவண்டிகள் தூக்கி வீசப்பட்டது. இதில் இரு மாடுகள் பலியாகின.  மேலும் மாட்டுவண்டி ஒட்டியை வந்த நபர் படுகாயமடைந்து செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மாட்டுவண்டியை சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.நேற்று காலையில் லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர். அங்கு வந்த போலிசார் இன்னும் புகார் அளிக்கப்படவில்லை புகார் அளியுங்கள் என கூறினர். பின்னர் போலீசார் விசாரணையில் மாட்டுவண்டிகள் மீது நிற்காமல் சென்றது.சுண்ணாம்புக்கல் ஏற்ற சென்ற டிப்பர் லாரி என்பது தெரிய வந்தது இதனையடுத்து ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த கனகராஜ்(37) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.



Tags : clash ,Larry ,
× RELATED கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு...