×

ஜெயங்கொண்டம் அருகே பூவாயிகுளத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 14 பேர் காயம்

ஜெயங்கொண்டம், ஏப்.28: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த பூவாயிகுளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு  போட்டியில் காளை முட்டியதில்  14பேர் காயமடைந்தனர்.பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தின் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டு, பின்னர் காளைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக விழாக்குழுவினர் அவிழ்த்து விட்டனர். காளைகளை அடக்க 250 இளைஞர்கள் களத்தில் இறங்கினர். காளைகளை அடக்கிய 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் மணக்கரையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர்மட்டும்  பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். சிறு காயமடைந்த ஆங்கியனூர் கார்த்திக், கோக்குடி தோமஸ், விழப்பள்ளம் விமல்ராஜ், பிரேம், கொணலையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 13பேரும் மருத்துமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர். ஜல்லிக்கட்டில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் சேலம், கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 440 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.  பூவாயிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் காளையை அடக்கியவீரர்கள் மற்றும் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், சேர், சைக்கிள்உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.


Tags : Jallikattu bungalows ,town ,Jayankondam ,
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்