×

கள் தடைக்குரிய பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு கள் இயக்க தலைவர் நல்லசாமி சவால்

மதுரை, ஏப்.28:  கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் ெபாருள் என்று நிரூபித்தால், கள் இயக்கம் சார்பில் ரூ. 10கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு காரணங்களாக உள்ள, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், தீர்க்கப்படாமல் உள்ள விவசாயிகள் பிரச்னை, இந்தியாவில் விளையும் பொருட்களுக்கு மானியம், இறக்குமதி பண்டங்களுக்கு வரி, நிர்வாக செலவை 25 சதவீதத்திற்கு கீழாக கொண்டுவருதல், அனைவருக்கும் இறுதிக்கால சமூக பாதுகாப்பு திட்டம், கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல் உள்ளிட்ட 14 கொள்கைகளை முன்வைத்து சூலூர் தொகுதியில் வேட்பாளர் கதிரேசன் நிறுத்தப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களோ, இவர்களுக்கு வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினரோ, கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என்பதை நிரூபித்தால், அவர்களுக், கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும்’’ என்றார். கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் தங்கராஜ் உடனிருந்தார்.

Tags :
× RELATED பேரையூர் அருகே கனமழைக்கு 6 ஏக்கர் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை