×

ஆலங்குளத்தில் தூய்மை பணி

ஆலங்குளம், ஏப். 28:   ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்தன. இதில் ஆலங்குளம், முக்கூடல், கீழப்பாவூர், வீரவநல்லூர், வடகரை பகுதிகளைச் சேர்ந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள்  என 130 பேர் பங்கேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். தேங்கிநின்ற கழிவுநீரை அகற்றல், வாறுகால், ஓடைகளை இரவு முழுதும் முற்றிலும் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டதோடு வீடுகள், குடியிருப்புகள்,  கடைகளில் பயன்படுத்தாத நிலையில் உள்ள பொருட்களில் தேங்கியுள்ள பொருள்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தாலுகா அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை, பஸ்நிலையம் வழியாக செல்லும் மழைநீர் செல்லும் ஓடையானது  கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தும் இரவு முழுவதும் அகற்றப்பட்டு  சீரமைக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர்கள் ஆலங்குளம் பெத்துராஜ், கீழப்பாவூர் கண்மணி, முக்கூடல் நவநீத கிருஷ்ணன், சுரண்டை பாபு, வடகரை கீழ்ப்பிடாகை வெங்கடகோபு, வீரவநல்லூர் முரளி, துப்புரவு ஆய்வாளர்கள் குமார், ஆறுமுகநயினார், மோகன், பிரபாகரன், குளத்தூரான்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Allegheny ,
× RELATED ஆலங்குளத்தில் உயர்கோபுர மின்...