பொதுமக்கள் ஆச்சர்யம் மாவட்டம் பொதுமக்கள் புலம்பல் செம்பட்டி- பழநி ரோட்டில் விரிவாக்க பணியால் தொடர் விபத்து

செம்பட்டி, ஏப். 25: செம்பட்டி- பழநி ரோடு தேனி, பழநி, கோவை, திருப்பூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் இத்தடத்தில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனினும் பல இடங்களில் குறுகிய திருப்பங்களும், போதிய அகலமின்றியும் இருப்பதால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஆத்தூர்- ஆதிலட்சுமிபுரம் நால்ரோடு சந்திப்பில், ரோடு விரிவாக்க பணி 2 வாரங்களுக்கு முன் துவங்கியது. முன்னதாக காவிரி நீர் பைப்லைனுக்காக குழி தோண்டி மணல் குவித்தனர். குறுக்காக கடந்து செல்லும் வாகனங்களை மறைக்கும் வகையில் இருந்ததால், விபத்துகளை ஏற்படுத்தி வந்தது. தற்போது விரிவாக்க பணி இப்பிரச்னையை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் வெறுமனே குச்சிகளை நட்டு வைத்துள்ளனர். இரவுநேரங்களில் இவை சரிவர தெரியாததால் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.

வாகனஓட்டிகள் கூறுகையில், ‘செம்பட்டி- பழநி ரோடு விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இரவு நேரங்களில் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கிறது. பணியை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றனர். வெயிலால் விற்பனை கூடியது

Related Stories: