×

கோடை மழை பெய்தும் அணைக்கு நீர் வரத்து குறைவு

வால்பாறை, ஏப்.26: வால்பாறை பகுதியில் கடந்து சில நாட்காளக கன மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டாலும், அணைக்கு நீர் வரத்து குறைவாகவே உள்ளது. பரம்பிக்குளம் ஆழியார் பசன திட்டத்தில் உள்ள மேல் நீரார் அணை, கீழ் நீரார் அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, துாணகடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, ஆழியார் அணை, திருமூர்த்தி அணை ஆகிய அணைகள் உள்ளது. கோடை மழை பெய்த போதும் இந்த அணையில் தற்போது தண்ணீர் அளவு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் மே மாதம் பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழையும், அதை தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழையாலும் அணைகள் நிரம்புகின்றன. இதனால் 5 மாவட்டங்கள் நீர் வளம் பெற்று பயன்பெருகிறது. கடந்த வருடம் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால். தற்போது பெய்து வரும் சாரல் மழையால் வால்பாறையில் வெயில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Water draining ,summer rainfall ,
× RELATED கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு...