×

ஊழல் செய்வதில் ஆண்களை மிஞ்சிய பெண் அதிகாரி கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டாஸ்மாக் பார் நஷ்டம் விஷயம் கொடுக்கும் குடைச்சலால், பெண் அதிகாரி பதற்றத்தில் இருக்காராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழ மன்னர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதுல, 25 கடைகளுக்கு மட்டுமே பார் நடத்தும் லைசென்ஸ் இருக்காம். மீதி உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டல்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பதற்காக   அனுமதிக்கப்படும் பார் கடைகளை டெண்டர் விடவில்லையாம். ‘பீஸ்’ என்கிற பெயர் கொண்ட மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், கட்சிக்காரர்களுக்கு மற்ற 83 பார்களும் கொடுக்கப்பட்டதாம். இந்த பார்களில் தான் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், எப்போதும் இந்த 83 கடைகளில் மாதத்துக்கு கோடிக்கணக்கில் விற்பனையாகுமாம். அதில், சில கோடிகள் இலை தரப்பினர் கைக்கு போய், குடிசைகள் கோபுரமானதாம். மாடிவீடுகள் அரண்மனைகளாக மாறி உள்ளதாம். இதற்கெல்லாம், அந்த மாவட்டத்தில் டாஸ்மாக் மேலாளராக இருந்த, மாஜி அமைச்சரின் ஆதரவு பெண் அதிகாரி தான் காரணமாம். மாதந்தோறும் பெண் அதிகாரிக்கும் லம்பா கமிஷன் சென்றதாம். இந்த கமிஷன் தொகையை கொண்டு பெண் அதிகாரி பெரிய பங்களாவே ஒன்று கட்டி விட்டாராம். வருவாய்க்கு அதிகமாகவே சொத்து சேர்த்துட்டாராம். இந்த கூட்டு கொள்ளையால் அரசுக்கு, 10 வருஷத்துல மட்டும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். தற்போது ஆட்சி மாற்றத்தால் டாஸ்மாக் வருவாயில் நஷ்டம் எப்படி ஏற்பட்டது என கண்டுபிடிச்சாங்களாம். அப்போதுதான், மாவட்ட பெண் அதிகாரி,  கோடியில் புரண்ட மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், இலை கட்சியினர் முக்கூட்டுக் கொள்ளை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு முக்கிய விஷயங்கள் மாங்கனி மாவட்ட காக்கி உயரதிகாரியின் காதுக்கு போகாவிட்டால்… நிர்வாகம் என்ன ஆகும்…’’ என்று கவலைப்பட்டார் பீட்டர் மாமா.  ‘‘தமிழகத்தில் 10 ஆண்டுகள் இலைகட்சி ஆட்சியில், கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை காக்கித்துறையில் அனைவரும் அடிமை மாதிரி இருந்தாங்க. மேற்கு மண்டலமே புரையோடி கிடந்துச்சு. ஆட்சி மாற்றத்தால புறம்தள்ளி வைக்கப்பட்ட ஏராளமான நேர்மையான ஆபிசருங்களுக்கு, அவங்களோட திறமைக்கு ஏத்த மாதிரி நல்ல பணிகள் வழங்கப்பட்டு வருது. இலைக்கட்சி ஆட்சியில் ஜால்ரா அடித்த காக்கிகளில் பெரும்பாலானோர் மாற்றப்பட்டு விட்டனர். ஆனால், மாங்கனி மாநகரில் பெரும் ஜால்ரா அடித்த அதிகாரிகள் இன்னும் இடமாற்றம் செய்யப்படலையாம். அவங்க எப்போ வெளியேறுவாங்க, நல்ல, நேர்மையான அதிகாரிகள் வரமாட்டாங்களா. அப்டின்னு நல்ல காக்கிகள் ஏங்குறாங்களாம். மாநகர உயர் அதிகாரிக்கு அனைத்து ரகசிய தகவலையும், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தெரிவிப்பாங்க. ஆனால் அங்கிருந்த அதிகாரி மாற்றப்பட்டு ஒரு மாதமாகியும், இன்னும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாகவே இருக்குதாம். யாருக்காக இன்னும் காத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்காம். முக்கிய பிரிவின் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியா இருக்கிறதால, சிட்டியில நடக்கும் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் எதுவுமே முழுமையாக உயர்அதிகாரியின் காதுக்கு செல்வதில்லையாம். இதனால் அந்த அதிகாரி பெரும் சிரமத்தில் இருப்பதா பேசிக்கிறாங்க. விரைவில் நல்ல அதிகாரியை அங்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வேலியே பயிரை மேய்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுதா…’’ சிரித்தபடியே கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின் ‘ஊர்க்காவல்’ தலைமையில் இருக்கிற ‘பியூட்டியப்பனை’ மாற்ற வேண்டுமென இங்கிருப்போர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம். போக்குவரத்து சீரமைப்பு, தேர்தல் பணி, காவல் வாகனம் ஓட்டுதல், விஐபிகள் பாதுகாப்பு, இரவு ரோந்து பணி என காக்கிச்சட்டைக்கு உதவிகரமான இவர்களில் தலைமையானவரை, 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டுமாம். இலைக்கட்சிக்காரரான அழகானவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி மாற்றமின்றி இருக்கிறார். 35 பெண்கள் இருந்தும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உடைமாற்ற அறை என எந்த வசதிகளும் செய்து தராமல், அன்றாட செலவு ஒதுக்கீட்டுத் தொகை துவங்கி, பழநி தைப்பூசம் உள்ளிட்ட தொடர் பாதுகாப்பு காலத்தில் பணியில் இருப்போருக்கு உணவே வழங்காமல் கணக்கு எழுதி வசூல் பார்ப்பது வரையிலும், பல்வேறு ‘‘நிதி முறைகேடு’’ குற்றச்சாட்டுகளை இவர் மீது சக ஊழியர்களே அடுக்குகின்றனர். மாவட்ட அமைச்சரைப் பார்த்தும் பணியாளர்களில் ஒரு பெரும்பகுதியினர் இடமாற்றம் செய்திட கோரிக்கை மனுவும் தந்திருக்கிறார்களாம். இலைக்கட்சிக்கு நெருக்கமான சென்னையில் இருக்கும் அதிகாரிகளை இப்போது இவர் தொடர்பு கொண்டு தன் பணிக்காலத்தை நீட்டிப்பதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் வெளிவந்துகொண்டே இருக்கிறதே.. குமரியில் என்ன பிரச்னை..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடந்த  2019ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார், அதில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அன்னாருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அவர் பிறந்த ஊரான தேரூர் பகுதியில் போதிய இடம் கிடைக்கவில்லை என்று திட்டத்தை தோவாளையில் செயல்படுத்த அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. தோவாளை  கிராமத்தில் 92.27 லட்சம் ரூபாய் மதிப்பில், கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க 2020 ஜூன் மாதம் காணொலி காட்சி வாயிலாக அப்போதைய முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அவசர கோலத்தில் அப்போதைய தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர் செயல்பட்டு இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடத்தை கட்ட இடத்தை தேர்வு செய்து என்ஓசி ஏதும் பெறாமல் நடவடிக்கை எடுத்தாராம். இப்போது இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றம் சென்று மணிமண்டப கட்டுமான பணிக்கு தடையாணை  பெற்றுவிட்டதாம். இதனால் திட்ட பணிகள் பாதியில் நிற்கிறது என்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டிற்கு இது ஒரு துளிதான்’’ என்றார் விக்கியானந்தா. …

The post ஊழல் செய்வதில் ஆண்களை மிஞ்சிய பெண் அதிகாரி கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Peter ,Manjustice Cholha ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது