×

கோடை உழவின் மூலம் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் வேளாண் அதிகாரி தகவல்

பெரம்பலூர்,ஏப்.25: கோடை உழவின்மூலம் படைப்புழுவின் தாக்குதலைக் கட் டுப்படுத்தலாம் என பெரம்பலூர்மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இளவரசன்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்தஆண்டு 61,625ஹெக்டேர் பரப்பளவில் மானா வாரியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. அவற்றில் படைப்புழுவின் தாக்குதல் அதி கம் காணப்பட்டது. முந்தைய பயிரிலுள்ள படைப்புழுவின் கூட்டுப்புழுவானது அறு வடைசெய்த மக்காச்சோளப்பயிர் தண்டுப்பகுதி மற்றும் மண்ணில் அதிகம் இருக்க வாய்ப்புகள் இருப்பதால், அனைத்து விவசாயிகளும் கடந்தஆண்டு பயிரிடப்பட்ட மக் காச் சோளப்பயிரின், தண்டு, இலைகளை அப்புறப்படுத்தவேண்டும். மேலும் கோடை உழவுசெய்து மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழித்துவிடலாம். கோடை உழவு செய்வதன்மூலம் மண்ணின் உள்பகுதியிலுள்ள கூட்டுப்புழுவானது வெளியில் கொண் டுவரப்பட்டு அதிக வெயிலின் காரணமாக இறந்துவிடுகிறது, மேலும் பறவைகளுக்கு இறையாகின்றன.

கோடைஉழவு செய்வதன்மூலம் அடுத்தபயிரில் இந்தப் பூச்சிகளின் தாக்குதலை வெகுவாக கட்டுப்படுத்துவதுடன் மழைநீர் வீணாகாமல் மண்ணில் சேமிக்க முடியும். இதனால் மண்ணில் இறுக்கம் குறைந்து மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்ப தால் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. களை மற்றும் கழிவுகள் மக்கி மண் ணுக்கு உரமாகிறது. மண்ணிலுள்ள படைப்புழுவின் கூடுகள் மற்றும் பல்வேறு வகை யான பூச்சியினங்களின் கூட்டுப்புழுக்கள் அழிகின்றன. முன் காலங்களில் பயன்படுத் திய ரசாயன களைக்கொல்லிகளின் வீரியம் வெகுவாகக் குறைகிறது. களைச் செடியின் விதைகள் அழிக்கப்படுகிறது. சூரியஒளி மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதால் கழிவுகள் நன்குமக்கி உரமாகிறது.

 ஒரு கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் படைப்புழுவின் தாய்அந்துப் பூச்சியானது 1500 -2000முட்டைகள் இடுகின்றன. இவையனைத்தும் புழுக்களாகமாறி மக்காச்சோளப் பயிரினைத் தாக்குகின்றன. ஆதலால் அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்து படைப்புழுவின் கூட்டுப்புழுவினை அழித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து விவசாயிகளும் ஒரேசமயத்தில் விதைப்பு செய்யவேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்புசெய்தால் வளர்ச்சிநிலையிலுள்ள மக்காச்சோளப்பயிர்க ளில் படைப்புழு அதிகளவில் தாக்கும்.

விதைகள் விதைப்பதற்குமுன்பே எக்டருக்கு 12 முறை வீதம் இனக்கவர்ச்சி பொறிகள் வைப்பதன்மூலம் இயற்கையான முறையில் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடலாம்.  விதைகளை பேவேரியா பேசியா னா 1கிலோ விதைக்கு 10கிராம்வீதம் கலந்து விதைநேர்த்தி செய்வதன்மூலம் கட்டுப் படுத்தலாம்.மக்காச்சோளம் விதைக்கும்போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை விதைப்பதன்மூலம் பூச்சித் தாக்கு தலைக் கட்டுப்படுத்தலாம். இந்தமுறைகளை கடைபிடித்து படைப்புழுவின் தாக்கு தலை முன்கூட்டியே வராமல் தடுத்து விவசாயிகள் பயன்பெறலாம்  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Agronomist officials ,attack ,crew ,summer plowing ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...