×

சூறைகாற்றில் படகு கவிழ்ந்தது கடலில் மூழ்கி 4 மீனவர்கள் பலி: 2 பேர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே அழிக்கல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். அவருக்கு சொந்தமான ‘ஓம் காரம்’ என்ற படகில்  நேற்று முன்தினம் மாலை அழிக்கால் பகுதியை சேர்ந்த 16 பேர் மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அழிக்கால் துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் வந்தபோது திடீரென சூறாவளி காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. அனைவரும் கடலில் விழுந்தனர். பின்னால், மற்றொரு படகில் வந்தவர்கள் 7 பேரை மீட்டனர். 5 பேர் நீந்தி கரை  சேர்ந்தனர். மீதமுள்ள தங்கப்பன், சுதேவன், சுனில்தத், ஸ்ரீ குமார் ஆகிய 4  மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்களும்  மீட்கப்பட்டன. இந்நிலையில், காயமடைந்த 12 மீனவர்களும் கொல்லம் மற்றும் ஆழப்புழா அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி 4 மீனவர்கள் இறந்த சம்பவம் கொல்லத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post சூறைகாற்றில் படகு கவிழ்ந்தது கடலில் மூழ்கி 4 மீனவர்கள் பலி: 2 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Arvindan ,Kollam, Kerala State ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...