×

பிளஸ்2 பொதுத்தேர்வில் எம்டிவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

கிருஷ்ணகிரி, ஏப்.25: பிளஸ்2 பொதுத்தேர்வில், கிருஷ்ணகிரி எம்டிவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளி சாலையில், எம்டிவி நகரில் இயங்கி வரும் எம்டிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் முதல் மதிப்பெண்ணாக 530 பெற்றுள்ளனர். மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 88, கணிதம் 92, இயற்பியல் 90, வேதியியல் 93, உயிரியல் 91, கணினிஅறிவியல் 91 என மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களை பள்ளியின் இயக்குனர் ராமச்சந்திரன், தாளாளர் டாக்டர் பாஸ்கரன், தலைவர் எம்வி.சீனிவாசன், முதல்வர் காளிமுத்து ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags : Commonweight MTV Matriculation School ,
× RELATED தனியார் ஊழியரிடம் ₹2.52 லட்சம் மோசடி