×

இலவச தையல் பயிற்சி

ஈரோடு, ஏப்.24:  கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனரா வங்கி தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடத்த உள்ளது. இந்த பயிற்சி ஈரோடு கரூர் ரோட்டில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மே மாதம் 3ம் தேதி முதல் ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள், சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயற்சியின் போது மதிய உணவும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி எண் : 0424 - 2400338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்