×

மாவட்டம் முழுவதும் ெதாடர் மழை அணைகள் நீர்மட்டம் உயர்வு

ஊட்டி, ஏப்.23: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் அளவு உயருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கி இடைவிடாமல் நான்கு மாதங்கள் பெய்தது. இதனால், தென்மேற்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தது. ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தேயிலை மகசூல் குறைந்தும், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக சமவெளிப் பகுதிகளில் மின் தேவைக்காக அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து உள்ளது. அதேசமயம் நீரோடைகள், குளங்கள், கிணறுகளில் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பனியில் கருகி போன ேதயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. அதேபோல், மலைபகுதிகளில் கூட விவசாயிகள் காய்கறி விவசாயம் துவக்கிவிட்டனர். விதைப்பு மற்றும் உரமிடும் பணிகளை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். வறண்டு போயிருந்த அனைத்து நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளது. வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், போதிய தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வந்தனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில் அனைத்து பூங்காக்களிலும் உள்ள மலர் செடிகளிலும் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன.  ரோஜா பூங்காவில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. அதேபோல், தாவரவியல் பூங்காவில் அனைத்து செடிகளிலும் மொட்டுக்களும், ஒரு சில செடிகளில் மலர்களும் பூத்துள்ளன. தொடர் மழையால் தண்ணீர் பாய்ச்சும் பணிகளை தோட்டக்கலைத்துறையினர் தவிர்த்துவிட்டனர். இதேபோன்று மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது. கோடை வெயிலை தணிக்க ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இம்முறை ஊட்டி குளிர்ச்சியை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பகல் நேரங்களில் மேக மூட்டம் மற்றும் மழையின் காரணாக ரம்மியமான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள்


Tags : droughts ,district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம்: கலெக்டர் தகவல்