×

கொல்லிமலை விவசாயி கொலை வழக்கில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

சேந்தமங்கலம், ஏப்.23: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை திருப்புலிநாடு பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் (42). இவரது சித்தப்பா மகன் பழனிவேல் முருகன்(35). இவரது மனைவி சாந்தி. கனகராஜூக்கும், பழனிவேல்முருகனுக்கும் விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 19ம் தேதி பழனிவேல்முருகன் வீட்டுக்கு சென்ற கனகராஜ், வீட்டில் இருந்த அவரது மனைவி சாந்தியுடன் தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனிவேல்முருகன் வீட்டிற்கு வந்து, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த கனகராஜை தட்டி கேட்டதுடன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கனகராஜை சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வாழவந்திநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, பழனிவேல்முருகன் மற்றும் அவரது மைத்துனர் வீரபாண்டியை(29) கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், படுகாயமடைந்த சாந்தி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாந்தி மீதான கொலை முயற்சி வழக்கில், இறந்துபோன கனகராஜின் மனைவி மஞ்சுளா (எ)பூஞ்சோலை(43), அவரது மகன் வல்லரசு(20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : killing ,
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...