வாக்கு எண்ணிக்கை மையம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

திருப்பூர்,ஏப்.22: மக்களவை தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு, பெருந்துறை,  அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட திருப்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் வாக்கு பெட்டிகளை வைக்க அதற்கான ஸ்ட்ராங் ரூம்களை தயார் செய்து, திருப்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மே 23ம்தேதி தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இந்த கல்லூரியின் வாக்கு பெட்டி வைத்திருக்கும் இடத்திற்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த கல்லூரியை சுற்றிலும் வைபை கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து 24 மணி நேரமும் அரசு அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

× RELATED குமரி அருகே 4 துறைமுகங்களில் தொடர்...