×

நாலூரில் உலர்களம் சேதம் விவசாயிகள் அவதி

திருச்சுழி, ஏப். 22: நரிக்குடி அருகே, நாலூரில் உலர்களம் சேதமடைந்து இருப்பதால், தானியங்களை பிரித்தெடுக்க விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
நரிக்குடி அருகே, நாலூரில் 10 ஆண்டுகளுக்கு முன், சிமெண்டால் ஆன உலர்களம் அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் தங்களது நெல், எள் உள்ளிட்ட தானியங்களை உலர்த்த பயன்படுத்தி வந்தனர். கைகளால் நெற்பயிர்களை அறுவடை செய்த காலங்களில், கதிர்களில் இருந்து நெல்லைப் பிரிக்க, இந்த உலர்களத்தை பயன்படுத்தினர். தற்போது அறுவடைக்கு இயந்திரம் பயன்படுத்துவதால், நெல்லை உலர்த்த மட்டுமே உலர்களத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும், எள் செடிகளை உலர்த்தி, எள்ளை தனியாக பிரிக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், உலர்களம் பராமரிப்பு இன்றி, கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால், விவசாயிகள் மண்தரையை உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த உலர்களத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் உழவர் சந்தை
(கிலோ, ரூபாய் மதிப்பில்)
கத்தரி       20
வெண்டை      30
தக்காளி       34
பச்சை மிளகாய்    46
அவரை    66
பாகற்காய்    75
கருணை    32
சின்னவெங்காயம்    27
பல்லாரி      20
இஞ்சி    100
கொத்தமல்லி    60
கறிவேப்பிலை    48
புதினா    25
கீரை    16
முருங்கைக்காய்    18
எலுமிச்சை    110
உருளைக்கிழங்கு    30
முட்டைக்கோஸ்    28
காரட்    45
பீட்ரூட்    35
முருங்கைபீன்ஸ்    95
பட்டர்பீன்ஸ்    120
காலிபிளவர்      35
சவ்சவ்      38
நூல்கோல்    32
டர்னிப்    28
முள்ளங்கி    28

Tags :
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம்