×

அவதூறு ஆடியோ பரப்பியதை கண்டித்து திருப்புத்தூரில் கண்டன பேரணி

திருப்புத்தூர், ஏப். 22:  புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு சமூதாயத்தைப்பற்றி அவதூறாக பேசும் ஆடியோ பதிவு வாட்ஸ் அப்பில் வெளியானது. இந்த ஆடியோ பதிவை வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி, தமிழகம் முழுவதும் அந்த சமூக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி, காரையூர், மணக்குடி, மாங்குடி, புதுவளவு, சோழுடையான்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருப்புத்தூர் திருந்தளிநாதர் கோயில் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு ரோடு, காந்தி சிலை, மதுரை ரோடு, அண்ணா சிலை, தாலுகா அலுவலக சாலை வழியாக சென்று தாசில்தார் தங்கமணியிடம் மனு அளித்தனர். இதேபோல, திருப்புத்தூர் டவுன் போலீசிலும் மனு அளித்தனர். பேரணியில் பெண்களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இதனையொட்டி சிவகங்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி மங்களேஸ்வரன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா