×

கடையம் அருகே வீடுபுகுந்த பாம்பு

கடையம், ஏப். 21:  கடையம் அருகே கீழ ஆம்பூரில் வீடுபுகுந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். கடையம் அருகேயுள்ள  கீழ ஆம்பூர் டானா பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது வீட்டில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த கடையம் வனக்காப்பாளர் சரவணன், வணக்காவலர் ரமேஷ்பாபு, வேட்டைத் தடுப்புக் காவலர் வேல்ராஜ் உள்ளிட்டோர் வீட்டில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்து கடையம் காட்டுப்பகுதியில் விட்டனர்.


Tags :
× RELATED அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு