×

மீனாட்சிபட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

தூத்துக்குடி, ஏப்.21:  வைகுண்டம் தாலுகா அணியாபரநல்லூர் கிராமம் மீனாட்சிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (திங்கள்) நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 7.25 மணிக்கு மேல் 4வது கால யாகசாலை பூஜை, ஸ்பர்ஸாகுதி, நாடிசந்தானம், மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.  மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சந்தனமாரியம்மன் கோயில் விழாக்கமிட்டியினர் மற்றும் மீனாட்சிபட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : MeenakshiPatti Sandana Mariamman temple ,
× RELATED தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைகூட்டம்