×

காரையாறு பள்ளி விளையாட்டு விழா

வி.கே.புரம், ஏப். 19:  காரையாறு பழங்குடியின அரசு உண்டு உறைவிட  பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.  தலைமையாசிரியர் மாலதி தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சுதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் கணேசன் வரவேற்றார். இதில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வனவர் மயிலுகண்ணு பரிசுகள் வழங்கினார். இதில் ஆதிவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம், ‘கியூ’ பிராஞ்ச் எஸ்ஐ மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது