×

சோலூரில் பிரசாரத்தை நிறைவு செய்தார் ராசா

ஊட்டி, ஏப். 17: நீலகிரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் ஆ.ராசா நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை சோலூர் கிராமத்தில் நிறைவு செய்தார்.
நாளை 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், நேற்று தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு ஊட்டி அருகேயுள்ள கடநாடு கிராமத்தில் ராசா பிரசாரம் துவக்கினார். அப்போது, அங்கு படுகர் இன மக்கள் பாரம்பரிய முறையப்படி, ராசாவை வரவேற்றனர். தொடர்ந்து ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை, எப்பநாடு, கக்குச்சி கூக்கல்தொரை, இடுஹட்டி போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டர். தொடர்ந்து, தும்மனட்டி கிராமத்திற்கு வந்த அவருக்கு அங்கும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தும்மனட்டி கச்சேரி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு ஊட்டி அருகேயுள்ள ேசாலூர் கிராமத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் ராசா பேசுகையில்,  ‘இந்தியாவை ஆளுவதற்கு தகுதியான மற்றும் சிறந்த ஒரு பிரதமரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக கொண்டு வரவேண்டும். அதற்கு நீங்கள் தான் ஆதரவு அளிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக., ஆட்சி அமைந்தால், கல்வி கடன் ரத்து செய்யப்படும். விவசாய கடன், நகைக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். இதன் மூலம் ஏழை எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், என்றார்.
இந்த பிரசாரத்தின் போது, திமுக., மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், காங்., கட்சி மாவட்ட தலைவர் மற்றும் ஊட்டி எம்எல்ஏ., கணேஷ், மதிமுக., மாவட்ட செயலாளர் அட்டாரி நஞ்சன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Raja ,campaign ,Solapur ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...