×

கூடலூர் அருகே பணம் பட்டுவாடா புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கடத்த முயற்சி

கூடலூர், ஏப்.17: கூடலூர் அருகே பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட காரை காவல் நிலையத்தில் இருந்து அதிமுகவினர் கடத்த முயன்ற சம்பவத்தில் அதிமுக-திமுகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கூடலூரை அடுத்த  நந்தட்டி இந்திராநகர் பகுதியில்  அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பினர். இதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் காரை கூடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக   முன்னாள் அமைச்சர் மில்லர், நகர செயலாளர் சக்திவேல் ஒன்றிய செயலாளர் பத்மநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காரை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த திமுக எம்எல்ஏ., திராவிடமணி, நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையிலான  திமுகவினர்  காரை வெளியே எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 இதன் பின் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றிய போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் மீண்டும் காரை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர். இதற்கிடையே   காரை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து திமுகவினர் கூறியதாவது: ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில்  இறங்கி விட்டனர். இதுதொடர்பாக  தேர்தல் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தாங்களாகவே கண்காணித்து  பணம் பட்டுவாடா செய்த காரை பிடித்து கொடுத்தாலும் அதிகாரிகள்  கண் முன்னே பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர்.   கார் மற்றும் காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Tags : Kodalur ,
× RELATED தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லை...