×

சாத்தான்குளத்தில் சமரச நீதிமன்றம் விழிப்புணர்வு

சாத்தான்குளம், ஏப்.17: உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தை அணுக நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை சம்மந்தப்பட்டவர்களாகவோ வக்கீல்கள் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம். சமரச மையத்தில் பிரச்னைகளுக்கு நேரடியாக பேச்சு வார்த்தை நடக்கிறது. பயிற்சி பெற்ற சமரசர்கள் பேச்சு வார்த்தையை வழி நடத்துகின்றனர். உகந்த தீர்வுகள் எட்டப்படுவதால் மேல்முறையீடு என்பதில்லை. செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமரச முடிவினால் காத்திருப்பு நேரங்களும் பொருட்செலவுகளும் மீதப்படுகின்றன.

   இதுகுறித்து நீதிமன்றம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு முகாம் நடந்தது. சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன், சமரச விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற சமரச வக்கீல் கல்யாண்குமார், வக்கீல்கள்வேணுகோபால், ராஜன்சுபாசிஸ் மணிமாறன், ரவி,ராமசந்திரன், கார்த்தீசன், கோபால், மகாராஜன், ஈஸ்டர்கமல், குமரேசன் விஜய் உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Court of Compromise ,Sattankulam ,
× RELATED தகுதியானோருக்கு இலவச வீட்டுமனை கோரி...