×

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போடி, கம்பத்தில் துணை ராணுவத்தினர் போலீஸ் அணிவகுப்பு

போடி/கம்பம், ஏப் 17: மக்களவை தேர்தலை முன்னிட்டு போடி, கம்பத்தில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடைபெற்றது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்கும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளனர். நேற்று துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் ஆயிரம் பேர் போடி கட்டபொம்மன் சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக வள்ளுவர் சிலை கடந்து பஸ்நிலையம் அருகிலுள்ள தேவர் சிலை வரை அணிவகுப்பு நடத்தினர். போடி டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் இந்த அணிவகுப்பு நடந்தது.

இதேபோல் கம்பத்தில் மேற்கு வங்க ஆயுதப்படை போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மேற்கு வங்காள ஆயுதப்படைப்பிரிவில் இருந்து வந்துள்ள 180 காவலர்கள் ஆயுதம் ஏந்தி கம்பம் வடக்கு காவல் நிலையத்திலிருந்து, அரசு மருத்துவமனை வரை அணிவகுத்து சென்றனர். 180 பேர் கொண்ட மேற்கு வங்காள ஆயுதப்படை போலீஸார், இன்ஸ்பெக்டர்கள் முகர்ஜி, பிரதீப்பானர்ஜி ஆகியோர் தலைமையில் கம்பம் நாடார் மீட்டிங் ஹால், க.புதுப்பட்டி பேரூராட்சி மண்டபம் ஆகிய இடங்கலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 17 எஸ்ஐக்கள், 3 சிறப்பு எஸ்ஐக்கள், 144 போலீசார், 14 உதவியாளர்கள் உள்ளனர். கொடி அணிவகுப்பு ஏற்பாடுகளை உத்தமபாளையம் டிஎஸ்பி வீரபாண்டி, இன்ஸ்பெக்டர்கள் பொன்னிவளவன், சுப்புலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Veil ,
× RELATED ஊட்டியில் நேற்று மேக மூட்டம்