×

கோவையில் ஓடும் வேனை வழிமறித்து ரூ.6.56 லட்சம் பான்மசாலா பறித்த 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை, ஏப். 16: கோவையில் டிரைவர் உட்பட மூன்று பேரை மிரட்டி வேனுடன் கடத்தி சென்று ரூ.6.56 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பாக்கெட்டுகளை ஆறு பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தன்சிங். இவர் கோவை ரங்கே கவுடர் வீதியில் பான்மசாலா மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பான்மசாலா நிறுவனத்தில் டிரைவராக தேஜேஸ்குமார்(22) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரத்தன்சிங், ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்து 860 மதிப்பிலான பான்மசாலா பாட்கெட்டுகளை செல்வபுரத்தில் உள்ள வியாபாரி ஜெபசிங் வீட்டில் கொடுக்குமாறு டிரைவர் தேஜேஸ்குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, 1,697 பாக்கெட் ெகாண்ட 28 பண்டல், 5 ஆயிரத்து 867 பாக்கெட் கொண்ட 30 பண்டல் பான் மசாலாக்களை குடோனிலிருந்து வேனில் ஏற்றிக் கொண்டு தேஜேஸ்குமார் நேற்றுமுன் தினம் அதிகாலை ஜெபசிங் வீட்டிற்கு சென்றார். உடன் 2 ஊழியர்களையும் அழைத்து சென்றார்.

அப்போது, வீட்டில் இறக்கி வைக்க இடம் இல்லாததால் பேரூர் போஸ்டல் காலனியில் வசிக்கும் எனது அண்ணன்வீட்டில் இறக்கி விடுங்கள் என தேஜேஸ்குமாரிடம் ஜெபசிங் தெரிவித்தார். இதையடுத்து வேனை அங்கிருந்து போஸ்டல் காலனிக்கு தேஜேஸ்குமார் கொண்டு சென்றார். அப்போது ஒரு காரில் வேனை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் போஸ்ட் காலனி அருகே வேனை வழிமறித்து நிறுத்தினர். பிறகு வேனிலிருந்த 3 பேரையும் மிரட்டி 2 ஊழியர்கைள காரில் அமர வைத்தனர். காரிலிருந்த கும்பலில் ஒருவன் வேனில் ஏறி தேஜேஸ்குமாரை மிரட்டி செட்டிபாளையம் ஜேஜே நகர் அழைத்து சென்று அங்கு பான்மசாலாவை இறக்கி வைத்தனர். பிறகு டிரைவர் தேஜேஸ்குமார் மற்றும் 2 ஊழியர்களையும் காலி வேனுடன் விடுவித்தனர். பிறகு அங்கிருந்து தப்பி வந்த அவர்கள் இது குறித்து ரத்தன்சிங்கிடம் தெரிவித்தனர். பிறகு பேரூர் போலீசில் தேஜேஸ்குமார் உட்பட 3 பேரும் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன்.  கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : gangs ,
× RELATED அஞ்சலியின் 50வது படம்