×

காங்.வேட்பாளரை ஆதரித்து ஐஎன்டியூசி பிரசாரம்

ஓசூர், ஏப்.16: ஓசூர் அருகே உப்பாரப்பள்ளியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஐஎன்டியூசி உறுப்பினர்கள் தளி, கெலமங்கலம், அஞ்செட்டி ஒன்றியங்களில் வாக்கு கேட்டு இருசக்கர வாகன பேரணி நடத்தினர். பேரணியை ஐஎன்டியூசி தேசிய அமைப்பு செயலாளர் மனோகரன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து தளி, கெலமங்கலம் ஒன்றிய மலை கிராமங்களில் சென்று, கிருஷ்ணகிரி நாடளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமாருக்கு ஆதரவாக  பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பேரணி ஜக்கேரி, போடிசிப்பள்ளி, கெலமங்கலம் பகுதியிலும், பின்னமங்கலம், சாத்தனூர், கோடிப்பள்ளி, திம்மராயப்பா, எல்லப்பா, தொழிற்சாலை பகுதியில் வாக்கு சேகரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, ஐஎன்டியூசி துணை தலைவர் முனிராஜ் செய்திருந்தார்.

Tags : campaign ,INTUCI ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...