×

மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் நசிவு

திண்டுக்கல், ஏப்.16:  மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியால் திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்கள் நசிந்து விட்டன என திமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக பிரசாரம் செய்தனர். திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரச்சாரம் செய்தனர். திண்டுக்கல் நாகல் நகர், ஆர்.எப்.ரோடு, மெங்கில்ஸ் ரோட்டில் நடந்த பிரச்சாரத்திற்கு முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பெற்ற தொழில்களை ஜி.எஸ்.டி என்ற ஆயுதம் மூலம் மத்திய அரசு அழித்துவிட்டது. மாநில அரசு வரிகள் போட்டு மக்களை நிமிர முடியாமல் செய்து விட்டது.


200 ரூபாய் போட்ட வரிக்கு ரூ.2 ஆயிரம் என்கிறார்கள். எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, சாப்பிட்டால் வரி என்ற நிலை உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 10 ஊராட்கிளை இன்னும் இணைக்காமல், மாநகராட்சி அந்தஸ்தை பெற முடியாமல் உள்ளனர். ஆனால் மாநகராட்சிக்கு உரிய வரியை மட்டும் வசூலிக்கின்றனர். இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். ரோடுகள், தெருக்களில் எங்கு பார்த்தாலும் பள்ளமாக குழியமாக உள்ளது. பாதாள சாக்கடை பள்ளத்தை இன்னும் மூடவில்லை. ரவுண்ட்ரோட்டில் நாங்கள் போட்ட கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடக்க முடியவில்லை. இந்த அவலத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும். இதற்கு திமுக வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : GSD ,government ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...