×

வைகோ பேச்சு சாலை மறியல் செய்த 20 பேர் மீது வழக்கு

கொடைக்கானல், ஏப்.16:  கொடைக்கானலில் கடந்த 12ம் தேதி இரவு லாரி மோதி 2 இளைஞர்கள் பலியாகினர். அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கடந்த 13ம் தேதி வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். விபத்துக்கு காரணமான வாகன உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கொடைக்கானலை சேர்ந்த ஜியாவுதீன்  மகன் முகம்மது ரசாக்(25), காதர்மைதீன் மகன் முகம்மது ஆசிக், ரகுகுமார் மகன் தனசேகர்(28), சரவணன் மகன் குருபிரசாத்(27), வின்சென்ட் மகன் ராஜா(40), வனராஜ் மகன் குணசேகரன்(24), உள்ளிட்ட 20 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : road ,
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்று...