×

கொடைக்கானலில் காட்டு மாடுகள் ‘மல்லுக்கட்டு’: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

 

கொடைக்கானல், ஜூன் 26: கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள்ளும், சுற்றுலா தலங்களுக்கும் நுழைந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி அருகே கீழ் பூமி பகுதியில் 2 காட்டு மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி கொண்டது.

சுமார் அரை மணிநேரம் ஆக்ரோஷமாக நடந்த இந்த சண்டையை கண்டு அவ்வழியே வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். மேலும் சிலர் காட்டு மாடுகளின் சண்டையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனவே கொடைக்கானல் நகர் பகுதிக்குள் ஊடுருவி பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வரும் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் காட்டு மாடுகள் ‘மல்லுக்கட்டு’: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...