நீடாமங்கலம், ஏப். 16: நீடாமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகா மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 23ம் தேதி கோடி ஏற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி உபயதாரர்களின் மண்டகப்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி பால்குடம், கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. இதனை தொடர்ந்து இன்று(16ம் தேதி) விடையாற்றியும், நாளை(17ம் தேதி) பேச்சாயி அம்மன் திருவிழாவும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் அரவிந்தன், செயல் அலுவலர் அய்யப்பன்,நீடாமங்கலம் நகரவாசிகள், தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் செய்து வருகின்றன