×

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்

விளாத்திகுளம்,ஏப்.14: விளாத்திகுளம் அரசு மருத்துவமனை 24 மணி நேர மருத்துவர்கள் வசதி மற்றும் மருத்துவ சேவை பெறும் மருத்துவமனையாக மாற்றப்படும் என அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணி வாக்குறுதி அளித்துள்ளார்.விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணி வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்பது விளாத்திகுளம் தொகுதி பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது. அமமுக சார்பில் போட்டியிடும் என்னை எம்எல்ஏவாக தேர்வு செய்தால் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை 24 மணி நேர மருத்துவர்கள் வசதி மற்றும் மருத்துவ சேவை பெறும் மருத்துவமனையாக மாற்றப்படும்.

அனைத்து நாட்களிலும் ஸ்கேன் வசதி, தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். விளாத்திகுளம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்து நெரிசல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். பணிமனையில் கூடுதலான புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். எனக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.அவருடன் ஒன்றிய செயலாளர் ரூபன் வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Vallathikulam Government Hospital ,
× RELATED துணை சுகாதார நிலைய காலியிடங்களை...