×

ஒரத்தநாடு அருகே லாரி கவிழ்ந்து விவசாயி பலி

ஒரத்தநாடு, ஏப்.14: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45),  விவசாயி. இவர் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட கடலை மூட்டைகளை ஒரு லாரியில்  ஏற்றிக்கொண்டு புதுகை மாவட்டம் ஆலங்குடி கடலை மில்லுக்கு நேற்று காலை  சென்று கொண்டிருந்தார். ராஜேந்திரன் கடலை மூட்டைகளுக்கு மேல்  அமர்ந்திருந்தார். அவருடன் மகன் ராகவன், உறவினர்கள் 2 பேரும்  இருந்தனர். திடீரென லாரி தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில்  ராஜேந்திரன் பலியானார். அவரது மகன் ராகவன், உறவினர்கள் 2 பேர்  லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Larry ,Oorathadana ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை