×

சமயபுரத்திற்கு பாதயாத்திரை லாரி மோதி பெண் பலி

தா.பேட்டை,  ஏப்.14:  தொட்டியம் அடுத்த நானாப்பட்டியிலிருந்து சுமார் 50  பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக  சென்றனர். முசிறி  அருகே உமையாள்புரம் என்ற இடத்தில் சென்றபோது கரூரிலிருந்து  ஜெயங்கொண்டத்திற்கு ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பக்தர்கள் கூட்டத்தில்  புகுந்தது. இதில் நானாப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் மனைவி பானுமதி (37)  படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மேலும் ராணி என்பவர்  படுகாயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளார். முசிறி போலீசார் விபத்துக்கு காரணமான லாரி  டிரைவர்  ரமேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Larry ,Pattyandra ,lady ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை