×

சித்திரை களரி திருவிழா

அலங்காநல்லூர், ஏப்.14:  அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டியில் உள்ள அழகுநாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 தெய்வங்களின் மாசிகளரி திருவிழா நடந்தது. இதற்காக அழகர்மலை சென்று பாரம்பரிய வழக்கப்படி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் சாமி ஆட்டமும் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்கள், வர்ணகுடைகளுடன் வாணவேடிக்கையுடனும், சாமி ஆடிகள் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து கிராமத்திலுள்ள அழகுநாச்சி அம்மன் கோவிலில் விஷேச பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. அழகர் ஆற்றில் இறங்மும் வைபவத்திற்காக 21 சாமியாடிகள் தங்களின் பரிவார தெய்வங்களின் வேடமணிந்து பாரம்பரிய வழக்கப்படி திரி எடுத்து சாமியாட்டம் நடத்தினர்.

Tags : festival ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!