×

தனுஷ்குமாரை ஆதரித்து தென்காசி தொகுதியில் 15ல் வைகோ பிரசாரம்

தென்காசி, ஏப். 12: தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து வருகிற 15ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார்.திமுக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து வருகிற 15ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெல்லை மேற்கு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு திருவேங்கடம், 5.30 மணிக்கு சங்கரன்கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 6.30 மணிக்கு கடையநல்லூர், 7 மணிக்கு தென்காசி கொடி மரத்திடலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : campaign ,Vaiko ,constituency ,Tenkasi ,
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ