×

புதுக்கோட்டையில் தொழில் வளர்ச்சியை பெருக்குவேன் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் உறுதி

புதுக்கோட்டை, ஏப். 11: திருச்சி மக்களவை  தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.கடந்த சில நாட்களாக கிராமம் கிராமமாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளான திருவப்பூர், டிவிஎஸ்கார்னர், எம்ஜிஆர் சிலை பகுதி, நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், கீழ ராஜ வீதி, தொண்டைமான் நகர், மச்சுவாடி, போஸ் நகர், மரக்கடை வீதி, சாந்தநாதபுரம் என நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கூகூர் சண்முகம், தேமுதிக கட்சி,  புதிய தமிழகம் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அனைருவம் கலந்துகொண்டனர்.

பிரசாரத்தின்போது தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் பேசியதாவது: அதிமுக கூட்டணி மகத்தான மெகா கூட்டணி. தமிழகம் முழுவதும் வெற்றிபெற உள்ள மகத்தான கூட்டணி. இந்த வெற்றி கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் வேட்பாளராக நான் திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளராக நான் முரசு சின்னத்திலே வாக்கு கேட்டு வந்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் புதுக்கோட்டை நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன், புதுக்கோட்டையில் தொழில் வளர்ச்சியை பெருக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ilango ,Pudukkottai ,DMD ,
× RELATED புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி...