×

மழை வேண்டி புனித தீர்த்தம் சுமந்து பாதயாத்திரை

ஊட்டி,  ஏப். 11: ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக அரசு  போக்குவரத்து கழகம் மூலம் ‘சர்க்கியூட்’ பஸ் சேவை வரும் 14ம் தேதி முதல்  துவக்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள  நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தாவரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், படகு  இல்லம் ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. குறிப்பாக,  தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில்  சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதனால், அனைத்து சாலைகளிலும் வாகன  நெரிசலும் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை சீரைமைக்க போலீசார்  திண்டாடி வருகின்றனர். அடுத்த மாதம் கோடை விழா துவங்கவுள்ள நிலையில்,  தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  ‘சர்க்கியூட்’ பஸ் சேவை வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. இந்த பஸ்  ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்று வரும். அரை மணி  நேரத்திற்கு ஒரு முறை இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. சர்க்கியூட் பஸ்களில்  பெரியவர்களுக்கு ரூ.100ம் சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக  வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்களில் செல்பவர்களுக்கு டிக்கெட்டிற்கு பதிலாக  ‘பாஸ்’ வழங்கப்படுகிறது.இந்த பாஸ் வைத்துள்ள பயணிகள் சர்க்கியூட் பஸ்களில் பாசில் குறிப்பிட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லாம்.

 ேமலும், தொட்டபெட்டாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இம்முறை  வரும் 14ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ஊட்டி -  கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா காட்சி  முனை வரை செல்லும் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த பஸ் இயக்கப்படவுள்ளது.  இதற்கு ஒரு நபருக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது  தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனை வரை செல்ல  தனியார் வானங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதலும், ஒரு  வாகனத்தில் பலரை அடைத்து ெகாண்டு செல்வதாலும் பாதுகாப்பு கருதி இம்முறை  தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம்  முடிவு ெசய்துள்ளது.

Tags : theertham ,
× RELATED தொழிலாளி மாயம்