×

கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு விவகாரம் திமுகவினர் 10 பேர் மீது வழக்குபதிவு

கோவை, ஏப். 11:கோவையில் கன்டெய்னர் லாரி சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவினர் பத்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
கோவை ஆத்துப்பாலத்தில் கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடந்த 8ம் தேதி இரவு ரோட்டில் குவிந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரியை சிறை பிடித்தனர். லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த லாரி போலீசாரால் மீட்கப்பட்டு கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கன்டெய்னர் லாரி திறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது டீத்தூள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கரூரை சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் முகமது சாஜித் (30) என்பவரை நேற்று முன்தினம் கைதுசெய்தனர். இந்நிைலயில், போத்தனூர் திருமால்நகர் கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்த ஷாஜகான் மகன் பெரோஸ்கான் (22) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தி.மு.க நிர்வாகிகளான குறிச்சி பிரபாகரன், கோட்டை அப்பாஸ், மசூத், யாசர், கனகராஜ், புவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், ரமணி, கனகராஜ் ஆகிய 10 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 147, 148, 505(2), 506(2) ஆகிய 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Tags : Container Laurie ,
× RELATED கோவை விமானநிலையத்தில் ரூ.90 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்