×

அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல்லில் இன்று முதல்வர் பிரசாரம்

நாமக்கல், ஏப்.11: அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பன் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பம்பாடி, பனிக்கனூர், எலவம்பட்டி, எடையப்பட்டி, துட்டம்பட்டி, குருக்குப்பட்டி மற்றும் தாரமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அப்போது, அவர் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் தொடர்ந்திட அதிமுகவுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். அவருடன் சங்ககிரி எம்எல்ஏ ராஜா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (11ம்தேதி) 5 இடங்களில் நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

ராசிபுரம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று காலை 8.30 மணிக்கும், சேந்தமங்கலம் தேர்முட்டி அருகில் 9.30 மணிக்கும் முதல்வர் பிரசாரம் செய்கிறார்.அதைத்தொடர்ந்து, நாமக்கல் மதுரைவீரன் கோயில் பொய்யேரி சாலையில் காலை 10.30 மணிக்கும், பரமத்திவேலூர் சிவா தியேட்டர் அருகில் 11.30 மணிக்கும், திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் 12.30 மணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக மின்சாரத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணி தெரிவித்துள்ளார்.

Tags : nominees ,Opposition ,Kaliyappan ,Chief Minister ,Namakkal ,
× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...