×

கீழ்வேளூர் அருகே அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் பக்தர்கள் திரண்டனர்

கீழ்வேளூர், ஏப்.11: முருகபெருமான் அரக்கன் சூரனை வதம் செய்ய சிக்கல் சிங்காரவேலரிடம் வேல் வாங்கி  திருச்சந்தூரில் சம்காரம் செய்து அதன் பாவம் தீர கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் உள்ள சரவணபொய்கை திர்த்தத்தில் (திருக்குளத்தில்) குளித்து விட்டு  சிவனை நோக்கி தவம் இருந்துள்ளார். அப்போது கோயில் உள்ள காளி அவதாரம் எடுத்து முருகனின் தவத்திற்கு  இடையூறு இல்லாமல் இருக்க நான்கு திசைகளை மற்றும் ஆகாயம்  என 5 திசைகளிலும் காவல் காத்து முருகன் தவம் இருக்க காவல் காத்துள்ளார். இதனால் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் உள்ள காளி அஞ்சுவட்டத்தம்மன் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயில் பங்குனி பெருவிழா கடந்த 31ம் தேதி வல்லாங்குளத்து முத்து முத்துமாரியம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. மறு நாள் ஐயனார் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் பல்வேறு வாகனத்தில் அஞ்சுவட்டத்தமன் வீதிஉலா காட்சி நடைபெற்று வருகிறது.  முக்கிய விழாவான தேர்திருவிழா நேற்று காலை 7 மணிக்கு வடக்கு வீதியுள்ள தேரடியில் இருந்து புறப்பட்டது. தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி வழியாக  மீண்டும் வடக்கு வீதியில் உள்ள தேரடிக்கு நிலைக்கு 11.30 மணிக்கு வந்து சேர்ந்தது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த.  12ம் தேதி விடையாற்றி, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தில்  நாகை கலெக்டர் சுரேஷ்குமார், இந்து சமய நலத்துறை உதவி ஆணையர் பாலசுப்பரமணியன் உள்ளிடார் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள், கிராம வாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Devotees ,temple ,Kilaveloor ,Anjudattamman Temple ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை