×

உத்தமர்கோயிலில் மேம்பாலத்தின்கீழ் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

மண்ணச்சநல்லூர், ஏப். 10:    உத்தமர்கோயிலில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பேன் என்று சமயபுரம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பெரம்பலூர் திமுக கூட்டணி ஐஜேகே கட்சி வேட்பாளர்  பாரிவேந்தர்
உறுதி அளித்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் நேற்று பிச்சாண்டார்கோவில், கூத்தூர், பனமங்கலம், வெங்கங்குடி, சமயபுரம், சிறுகனூர், திருப்பட்டூர், எதுமலை, இருங்களூர் உள்ளிட்ட  பல்வேறு ஊராட்சிகளிலும்  தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  பிரசாரத்தில் பொதுமக்களிடையே வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது: இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்தான் வருவார் என்று 2 மாதங்களுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அது நிச்சயம் பலிக்கும். அதே போல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் நேரம் நெருங்கி விட்டது. நான் வெளியூர் ஆள் கிடையாது. மண்ணச்சநல்லூர் பகுதிக்கு நன்கு அறிமுகமான நபர்தான். இப்பகுதியில் மருத்துவ சேவையும், கல்விச் சேவையும் அளித்து வருகிறேன். ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். முற்றிலும் வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மலர் விவசாயிகள் பயனடையும் வகையில் மண்ணச்சநல்லூரில் சென்ட் தொழிற்சாலை அமைப்பேன். நொச்சியத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பஸ் போக்குவரத்திற்கு பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும் விவசாயிகளும் பயன் அடைவார்கள். நான் நிச்சயம் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன். ஸ்டாலின் முதல்வரானால் விவசாய கடனும், மாணவர்களின் கல்விக்கடனும் தள்ளுபடி செய்யப்படும். ராகுல் பிரதமரானால் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும். அதேபோல் உத்தமர்கோவில் மேம்பாலத்தின் கீழ் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பேன். மண்ணச்சநல்லூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். விவசாயிகள் பயன் அடையும் வகையில் கொள்ளிடம் வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டி பாசன வசதியை மேம்படுத்துவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார். திமுக மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திருச்சி கலை மற்றும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.கொண்ட உண்டியல் உடைந்து கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இரும்புலிக்குறிச்சி போலீசார், உண்டியலை கைப்பற்றி பார்த்தபோது அதில் ரூ.11 மட்டுமே இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த உண்டியல் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சொந்தமானதா அல்லது வேறு எங்காவது திருடி இங்கு வந்து போட்டுவிட்டு சென்றார்களா என்று விசாரித்து வருகின்றனர்.

Tags : Barivanthar ,Perambalur IJK ,
× RELATED உத்தமர்கோயிலில் மேம்பாலத்தின்கீழ்...