×

சிவிஜில் ஆப் மூலமாக வந்த 10 புகார் மீது நடவடிக்கை ஆதாரமின்றி 14 புகார் தள்ளுபடி

பெரம்பலூர்,ஏப்.10: தேர்தல்ஆணையம் புதிதாக இந்தத் தேர்தலில் நடைமுறைப் படுத்திய சிவிஜில் ஆப்மூலம் பெரம்பலூர்மாவட்டத்தில் 25புகார் வந்துள்ளது. முழுமையான ஆதாரமற்ற 14புகார்கள் ஆதாரமற்றதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 10 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தில்லுமுல்லு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, 2019 பாரா ளுமன்றத் தேர்தலில் புதிய மொபைல் ஆப்பினை இந்தியத் தேர்தல்ஆணையம் தமி ழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பிளேஸ்டோரில் சி விஜில் என ஆங்கிலத்தில் டைப்செய்து அந்தஆப்பினை டவுன்லோடு செய்து கொள்ளவேண்டும். பிறகு வாக்காளர்களுக்கு தேர்தல் விதிகளைமீறி பணம் கொடுப்பதையோ, நலத்திட்டஉதவிகளை  வழங்குவதையோ, சுவர் விளம்பரம் எழுதுவதையோ, அதனை அழிக்காமல் விட்டுவிட்டதையோ, பேனர்கள் வைப்பதையோ, வைத்திருந்ததை அகற்றாமல் விட்டு விட்டதையோ புகார்தாரர் தங்கள் செல்போனில் போட்டோ எடுத்தும், வீடியோ வாக எடுத்தும் அந்த ஆப்மூலம் தேர்தல்ஆணையத்திற்கு அனுப்பலாம்.அது தேர்தல்ஆணையத்திற்கு தக்கஆதாரமாக இருக்கும். புகார்தாரரும் கட்டண மில்லா செல்போனில் பேசி ஏமாற்றாமல், யார் புகாரைப் பதிவுசெய்துள்ளனர் என்பது வரை தேர்தல்ஆணைத்தால் கண்டறியப்படும்.

இதுகுறித்து 100நிமிடங்களில் நடவடிக் கை எடுக்கப்படும், புகார்தாரர் பெயர் ரகசியமாக்கப்படும்  என இந்தியத் தேர்தல் ஆ ணையம் தெரிவித்திருந்தது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சிவிஜில் ஆப்மூலம் மார்ச் 10ம்தேதி முதல் ஏப்ரல் 9ம்தேதிவரை மொத்தம் 25 புகார்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இவற்றில் 10புகார்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14புகார் பதிவுகள் முழுமையான ஆதாரமற்ற வெற்றுப் புகார்களாக இருந்ததால் அவை தள்ளு படி செய்யப்பட்டுள்ளன. 1 புகார்பதிவு மட்டும் நிலுவையில்உள்ளது என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CVG ,
× RELATED தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை