×

காளியம்மன் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி, ஏப். 10:சிங்கம்புணரியில் காளியம்மன் கோயில் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பெண்கள் மாவிளக்கு வைத்தும், முளைபாரி ஊர்வலம், அக்கினிச் சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : festival festival ,Kaliyamman ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு