×

கூட்டணி வேட்பாளருக்கு திமுக.,வினர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு, ஏப். 10:   திமுக., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு தொகுதி வேட்பாளரான கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்க கோரி திமுக.,வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் நேற்று மாலை நசியனூர் பகுதியில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் திமுக ஈரோடு மாவட்ட அவை தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம், ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,DMK ,coalition candidate ,Vannar ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்