×

விளாத்திகுளத்தில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

விளாத்திகுளம்,ஏப்.10:     விளாத்திகுளம் தொகுதியில் ஏப். 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அமமுக வேட்பாளர் ஜோதிமணி  மஞ்சநாயக்கன்பட்டி,கீழ ஈரால்,மேல ஈரால், டி.சண்முகாபுரம்,செமப்புதூர், ஈராட்சி ,இளம்புவனம்,கே.சிதம்பராபுரம் ,சிந்தலக்கரை, வெங்கடேஸ்வராபுரம் ,சின்னமலைக்குன்று, மீனாட்சிபுரம், அய்யா கோட்டையூர், உருருளைகுடி, கடலையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் : விளாத்திகுளம் தொகுதியில் விவசாயத்தை தவிர பொது மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்கள் எதுவும் கிடையாது. எனவே  தொகுதியில் அரசு விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இளைஞர்கள் விவசாயம் சார்ந்த கல்வியைப் பெறலாம்.மேலும் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் விளாத்திகுளம் தொகுதியில் மண் ஆராய்ச்சி செய்யப்பட்டு எந்தெந்த பயிர்கள் பயிரிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வழிகாட்ட முடியும் இதன் மூலம் விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் உலக தரத்தில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விளாத்திகுளம் தொகுதி விவசாயிகளுக்கு  வறட்சி நிவாரணம் மற்றும் மானியம் எதுவும் கிடைக்கவில்லை இதனால் விளாத்திகுளம் தொகுதி மற்றும் விவசாய பொது மக்களின் வாழ்வாதாரம் பின்தங்கிய நிலையில் உள்ளது.எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் என்னை பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விளாத்திகுளத்தில் அரசு விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமல்லாமல் விளாத்திகுளம் தொகுதி ஏழை எளிய பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என்று பேசினார்.


Tags : Agricultural Research Institute ,
× RELATED தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை...