×

மஞ்சூரில் திமுக, கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிப்பு

மஞ்சூர், ஏப்.9: மஞ்சூரில் திமுக,கூட்டணி கட்சியினர் ஆ.ராசாவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு தெற்கு ஒன்றிய திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன், மாடக்கன்னு, ஈஸ்வரன், பேரூராட்சி அவைத்தலைவர் ஆறுமுகம், பேரூராட்சி செயலாளர் ராஜூ, கிளை செயலாளர்கள் பன்னீர்செல்வம், நாராயணன், சிவக்குமார், ராஜன், மணி, பிரபு, பூபதி, நகேந்திரன், மாணிக்கம், லுாயிஸ், ஷாஜி, குந்தா வட்டார காங்கிரஸ் தலைவர் நேரு, மாநில இளைஞரணி முன்னாள் துணை தலைவர் நாகராஜ், பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார், மேல்குந்தா பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார், ராமச்சந்திரன், ராஜூபெட்டன், மா.கம்யூ., தாலுகா கமிட்டி உறுப்பினர் அலியார், ஏஐடியூசி கட்டிடத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்பட ஏராளமானோர் ஊர்வலமாக சென்று மஞ்சூர் பஜார், மேல்பஜார், மணிக்கல்மட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ,ராசவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யும்படி பொதுமக்கள், வியாபாரிகளிடம் பிரச்சாரம் செய்தனர்.

Tags : DMK ,Manchur ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்